நடிகர் ராகவா லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது!

 

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது!

பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வந்த ஜெயச்சந்திரன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.  

‘தாயன்பு ட்ரஸ்ட்’ சார்பில் நடிகர் லாரன்ஸுக்கு  5 ரூபாய் டாக்டர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ttn

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். மிகக் குறைந்த கட்டணத்தில் கடந்த 45 ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வந்த ஜெயச்சந்திரன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.  

ttn

இந்நிலையில்  5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நடந்த விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் ராகவா லாரன்ஸிற்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய லாரன்ஸ்,  மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும்  தெரிவித்தார். முன்னதாக கடந்த ஆண்டு மக்கள் சேவைக்காக  ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றது  குறிப்பிடத்தக்கது.