நடிகர் ரஜினியுடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் சந்திப்பு!

 

நடிகர் ரஜினியுடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் சந்திப்பு!

இதையடுத்து ரஜினியை பல்வேறு தரப்பினர் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார்.  அப்போது கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.  இதையடுத்து ரஜினியை பல்வேறு தரப்பினர் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். 

ttn

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு வந்த  ரஜினியின் நண்பரும் காங்கிரஸ் எம்பியுமான  திருநாவுக்கரசர் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல், மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை உள்பட  பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

yn

முன்னதாக ரஜினியை இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் பணியாற்ற ரஜினி ஆர்வமாக இருக்கிறார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.