நடிகர் ரஜினிக்கு விருது : ரசிகனாக வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு ..!

 

நடிகர் ரஜினிக்கு விருது : ரசிகனாக வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு ..!

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிக்கு திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதற்காக ‘ICON OF GOLDEN JUBILEE’ விருது.

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிக்கு திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதற்காக ‘ICON OF GOLDEN JUBILEE’ என்னும் விருதை வழங்கப் போவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.

Rajini

இந்த விருது, கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை, 8 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப் போவதாகவும்  அறிவித்துள்ளது. நடிகர் ரஜினி பெறப் போகும் இந்த விருதிற்காகப் பல தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Rajini

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, நல்லவர் வல்லவரான நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு சிறப்பு விருது வழங்க முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று கூறினார். மேலும், தான் பெரிய ரஜினி ரசிகர் என்றும் ஒரு ரசிகனாக அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.