நடிகர் ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு …அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!

 

நடிகர் ரஜினிகாந்த்  பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு …அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!

ரஜினிகாந்த்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 48 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்  தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டது தெரியவந்தது.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகளுடன் சென்னையிலிருந்து சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக  அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

சென்னையிலிருந்து மைசூருக்கு  இன்று காலை  ஒரு சிறியரக விமானம் புறப்பட்டுச் சென்றது.  இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 48 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்  தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் சிறிது நேரத்தில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  இருப்பினும் இந்த விவகாரம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ttn

நடிகர் ரஜினி தற்போது தலைவர் 168 படத்தில் இயக்குநர்  சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு செல்ல புறப்பட்ட போது தான் இந்த நிகழ்வு நடந்ததாகத் தெரிகிறது.