நடிகர் யோகி பாபு – மஞ்சு பார்கவி திருமணம்….வைரல் போட்டோஸ்!

 

நடிகர் யோகி பாபு – மஞ்சு பார்கவி திருமணம்….வைரல் போட்டோஸ்!

சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்

சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ள அவர் தனது கடின உழைப்பால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பாரில் இணைந்துள்ளார்.

 

இவர் சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ttn

இந்நிலையில்  நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும்   இன்று காலை (05.02.2020)  யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . வரும்  மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.