நடிகர் யோகி பாபுக்கு ரசிகர்கள் கொடுத்த திருமண பரிசு!

 

நடிகர் யோகி பாபுக்கு  ரசிகர்கள் கொடுத்த திருமண பரிசு!

மார்ச் மாதத்தில் வரவேற்பு  நிகழ்ச்சி வைத்து அனைவரையும் அழைப்பேன் என்று யோகி பாபு விளக்கம் அளித்தார். 

சின்னதிரை மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யோகிபாபு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில்   நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும்   கடந்த 5 ஆம் தேதி  யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

 


 

யோகி பாபுவின் திடீர் திருமணத்திற்கு என்ன காரணம்  என்று பலரும் குழப்பத்திலிருந்தனர்.  ஆனால் குடும்பத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் அவசரமாகத் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. கண்டிப்பாக மார்ச் மாதத்தில் வரவேற்பு  நிகழ்ச்சி வைத்து அனைவரையும் அழைப்பேன் என்று யோகி பாபு விளக்கம் அளித்தார். 

 

இந்நிலையில் யோகி பாபுவை அவரது வீட்டில் சந்தித்த ரசிகர்கள் சிலர் அவருக்கு திருமண பரிசாக திருமண கோலத்தில் உள்ள மணமக்களின் புகைப்படங்களை அளித்துள்ளனர்.

 

அப்போது யோகிபாபு குர்தா அணிந்தபடி உள்ளார். அவரது மனைவி புதுப்பெண்ணின் வெட்கத்துடன் அருகில் நின்று போட்டோவுக்கு போஸ்  கொடுத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.