நடிகர் பாலா சிங் திடீர் மரணம்…அதிர்ச்சியில் திரையுலகினர்!

 

நடிகர் பாலா சிங் திடீர் மரணம்…அதிர்ச்சியில் திரையுலகினர்!

புதுப்பேட்டை படத்தில் தாதாவாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

குணச்சித்திர நடிகரான பாலா சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 67.

ttn

தமிழில் அவதாரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா சிங். இதையடுத்து இந்தியன், ராசி, புதுப்பேட்டை, சாமி  மற்றும் சமீபத்தில் என்ஜிகே உள்ளிட்ட சுமார் 100ற்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ளார்.  குறிப்பாகப் புதுப்பேட்டை படத்தில் தாதாவாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ttn

இந்நிலையில் பாலா சிங் சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. நடிகர்  பாலா சிங் உயிரிழந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.