நடிகர், நடிகைகள் தேவை… பார்த்திபன் அறிவிப்பு

 

நடிகர், நடிகைகள் தேவை… பார்த்திபன் அறிவிப்பு

ஒத்த செருப்பு படத்திற்கு பின்னர், ஆர்.பார்த்திபன் இயக்கி,நடித்து தயாரிக்கவிருக்கும் படம் ‘இரவின் நிழல்’.

நடிகர், நடிகைகள் தேவை… பார்த்திபன் அறிவிப்பு

’’இரவின் நிழலில் என் 30-ல் நடிக்க PLUS பொருத்தமானவர்கள் அணுக…’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தில் பார்த்திபனின் இளவயது கதாபாத்திரத்தில் நடிக்க 25 முதல் 28 வயது வரையுள்ள, 18 முதல் 29 வயது வரை, 14 வயதுள்ளவர்கள், 5 முதல் 10 வயதுள்ளவர்கள் அணுகவும் என்றும்,

நடிகர், நடிகைகள் தேவை… பார்த்திபன் அறிவிப்பு

16 வயது முதல் 18 வயதுடைய தென்னிந்திய அழகு பெண்கள், 20 வயது முதல் 25 வயதுடைய தென்னிந்திய கலாச்சாரமான பெண்கள் அணுகவும் என்றும் விளம்பரம் செய்திருக்கிறார்.

மேலும், 50வயது பிராமண தோற்றத்தில் இருக்கும் ஆண், 50வயதில் முஸ்லீம் தோற்றத்தில் இருக்கும் ஆண் தேவை என்றும் கேட்டிருக்கிறார் பார்த்திபன்.

நடிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய இரண்டு வீடியோக்கள் மற்றும் 4 போட்டோக்களுடன் சுய விபர குறிப்புகளையும் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முன்னதாக, நண்பர்களுக்கு வணக்கம்! ‘இரவின் நிழல்’ தவிர இன்னொரு படமும் என் இயக்கம் நடிப்பில் (நகைச்சுவை தூக்கலாக) இவ்வாண்டே நடக்க இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.