நடிகர் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் காம்போவின் ஃபஸ்ட் லுக் அப்டேட்!

 

நடிகர் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் காம்போவின் ஃபஸ்ட் லுக் அப்டேட்!

தனுஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி   நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை வைத்து  D40 என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி   நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 


 

மேலும்  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது. 

 


 

இந்நிலையில்  D40 படத்தின் கடைசி 3 நாட்களுக்கான ஷூட்டிங்  6-ம் தேதி நடக்கவுள்ளதாகவும், படத்தின்  ஃபஸ்ட் லுக் வரும் 9-ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்  மதுரையில் நடைபெற்றது. இதில் தனுஷ் முரட்டு மீசையில் மாஸாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.