நடிகர் தனுஷுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு: வைரலாகும் வீடியோ!

 

நடிகர் தனுஷுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய  சிம்பு: வைரலாகும் வீடியோ!

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை நடிகர் தனுஷுடன்  கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னை: நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை நடிகர் தனுஷுடன்  கேக் வெட்டி கொண்டாடியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சிம்பு பன்முகத்திறன் கொண்டவர். அதே சமயத்தில் பல சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர். படப்பிடிப்புகளுக்குச் சரிவர செல்லாமல் சிக்கலில் சிக்கி தவித்த சிம்பு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று தனது 36வது  பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை அவரது நண்பர்களான நடிகர் தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா, ஜெயம்ரவி உள்ளிட்ட பலரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகின்றது. மேலும் திரைத்துறையை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சிம்புக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.