நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி

 

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி

அமராவதி: நடிகர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும், என்.டி ராமராவ் மகனுமான ஹரிகிருஷ்ணா தெலங்கானா மாநிலத்தில் நிகழந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி ராமா ராவ் மகனான நந்தமுரி ஹரிகிருஷ்ணா, தெலங்கானா மாநிலம், நல்லகுண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளிஅடாங்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்லும் போது அவரது கார் எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணா படுகாயமடைந்தார். இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது ரசிகரின் திருமணத்துக்குச் சென்ற ஹரிகிருஷ்ணா தானே காரை ஒட்டியதாக கூறப்படுகிறது.

நடிகர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையான ஹரிகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியப் பொறுப்பிலும் உள்ளார். ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகி ராம், நல்கொண்டாவில் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.