நடிகர் சூரி ஹீரோவாகிறார்? யார் படத்துல தெரியுமா? 

 

நடிகர் சூரி ஹீரோவாகிறார்? யார் படத்துல தெரியுமா? 

நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதல் வெறும்  நகைச்சுவையாக நடிகராக மட்டுமே நடித்து வருபவர் சூரி . தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் இவரை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தான் நகைச்சுவை நடிகராக மட்டுமே நடிக்க விரும்புவதாகக் கூறியிருந்தார். தற்போது அந்த பேச்சை மறந்துவிட்டு இவர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

soori

பொதுவாக நகைச்சுவை நடிகர் நம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பது ஒன்றும் புதிதில்லை. நாகேஷ் தொடங்கி யோகி பாபு, சந்தானம் வரை ஹீரோவாக நடித்துவிட்டனர். அந்த வகையில் தற்போது சூரி ஹீரோவாக பிரபல இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.  

vetri maran

RS Infotainment தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.