நடிகர் சதீஷுக்கும் சிந்துவுக்கும் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து !

 

நடிகர் சதீஷுக்கும் சிந்துவுக்கும் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து !

இன்று காலை நடிகர் சதீஷுக்கும் சிந்துவுக்கும் சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சதீஷ். நீண்ட காலமாக இவருக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னர், ‘சிக்சர்’ திரைப்படத்தின் இயக்குநரின் தங்கை சிந்துவிற்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ttn

சிக்சர் படத்தில் ஹீரோவுடன் சதீஷ் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால் இரண்டு பேரும் காதலித்துள்ளனர் என்று கிசுகிசுக்கள் வந்தன. இதற்கு, சிந்துவின் அண்ணன் சாச்சி இந்த திருமணம் முற்றிலுமாக நிச்சயிக்கப்பட்டது தான். காதல் திருமணம் அல்ல என்று கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

ttn

அதன் பின்னர், திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்ட சதீஷ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கி வந்தார்.

ttn

இறுதியாக, இன்று காலை நடிகர் சதீஷுக்கும் சிந்துவுக்கும் சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

ttn

நேற்று மாலை நடைபெற்ற ரிசப்ஷனில் நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, கலைப்புலி எஸ்.தாணு, , ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ttn

இவர்களது திருமணத்திற்கு சதீஷின் ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.  தற்போது ட்விட்டரில் ஹாஷ்டேக் சதிஷ் #sathish ட்ரெண்ட் ஆகி வருகிறது.