நடிகர் சங்க தேர்தல்: விஷாலை தொடர்ந்து ஆளுனரை சந்தித்த பாக்கியராஜ்!

 

நடிகர் சங்க தேர்தல்: விஷாலை தொடர்ந்து ஆளுனரை சந்தித்த பாக்கியராஜ்!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாகச் சுவாமி சங்கர்தாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்தித்து ஆலோசனை செய்துள்ளனர்.

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாகச் சுவாமி சங்கர்தாஸ் அணியினர் இன்று ஆளுநரை சந்தித்து ஆலோசனை செய்தனர்.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 61 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுபாது, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் , மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார். அது தொடர்பாக நேற்று பாண்டவர் அணியின் சார்பில் நடிகர்கள் விஷால், கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை செய்தனர். 

இந்த நிலையில் தற்போது பாண்டவர் அணியை தொடர்ந்து பாக்யராஜ் அணியும் இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுனரை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி, பிரசாந்த், சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

அதில் நடிகர் சங்க தேர்தல் நடத்தும் இடம், யாருடைய மேற்பார்வையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரு அணியினர்களும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை சந்திக்காமல்  நேராக ஆளுனரை சந்தித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.