நடிகர் சங்க தேர்தல் ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

நடிகர் சங்க தேர்தல் ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணியும்’ களமிறங்கியது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

இதனிடையே தேர்தலை  ரத்து செய்ய கோரி  ஏழுமலை என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இந்தவழக்கு விசாரணை கடந்த மாதம்   சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து  இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. 

 


 

இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷால் தரப்பில், 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில் மூன்று நான்கு பேர்கள் சொல்லும் புகாரை ஏற்று தனி அதிகாரியை நியமித்துள்ளது சட்ட விரோதமானது. எனவே அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்  என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ttn

இந்நிலையில் இந்த நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.. அதில் நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ்  நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.