நடிகர் சங்க தேர்தல் ரத்து!

 

நடிகர் சங்க தேர்தல் ரத்து!

பதவிக்கு வரத் துடிக்கும் எல்லோருமே, ‘எனக்கு பதவி ஆசையில்லை’என்கிற ஒற்றை மந்திரத்தை தான் அஸ்திரமாக முதலில் எடுத்து வைக்கிறார்கள்.  

பதவிக்கு வரத் துடிக்கும் எல்லோருமே, ‘எனக்கு பதவி ஆசையில்லை’என்கிற ஒற்றை மந்திரத்தை தான் அஸ்திரமாக முதலில் எடுத்து வைக்கிறார்கள்.  பதவிக்காக, தேர்தலில் நிற்கவில்லை… நல்லது செய்யவே நிற்கிறேன்’ என்று அதிரடியாய் நடிகர் சங்கத்துக்குள் செயலாளராய் நுழைந்த விஷால் அதன் பிறகு, பிடிக்காதவர்களை எல்லாம் கட்டம் கட்டி, சங்கத்தை விட்டு நீக்கியது எல்லாம் கலைவாணர், எம்.ஜி.ஆர். காலத்து சங்கத்துக்கு கால காலத்துக்கும் இழுக்கு. தேரை இழுத்து வந்து நடுரோட்டில் நிறுத்தியாச்சு கதையாக, சந்தி சிரிக்கிறது நடிகர் சங்க பஞ்சாயத்து.
இந்நிலையில், இந்த தேர்தலிலும் அதே ‘பாண்டவர் அணியாக நிற்கிறோம். கட்டிடத்தை கட்டுறோம்’ என்று விஷால் அண்ட் கோ மல்லுக்கட்ட, ‘சங்கரதாஸ் அணியாக’ பாக்யராஜ் முஷ்டியை உயர்த்தி முன் நின்றார்.

‘எம்.பி தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ என்று நீதிபதி  சொல்கிற அளவிற்கு பரபரப்பைக் கிளப்பினார்கள் இரண்டு அணியினரும். இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்கும் படி உத்தரவிட்டுள்ளார் மாவட்ட பதிவாளர். அவரது கடிதத்தில், “ 2017-18ம் ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலின் கோர்வை தென்சென்னை மாவட்டப் பதிவாளரிடத்தில் பரிசீலனைக்காக நிலுவையாக உள்ள நிலையில் எந்த வருட உறுப்பினர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடைபெறுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” என்றும், ‘2015-2018ம் ஆண்டுக்கான  நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ம் அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.

2018 நவம்பரில் இருந்து 6 மாத காலத்திற்கு தேர்தலை தள்ளி வைத்து, கட்டிட ப் அணி முடிவடைந்தவுடன் 2019 ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவின் நிலை குறித்தும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து விபரங்கள் குறித்து தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்க ஆணையிடப்படுகிறது’ என்று  மாவட்ட பதிவாளர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் சொன்ன தேதியில் நடந்தே தீரும். கோர்ட் ஆர்டருக்காக காத்திருக்கிறேன்’ என்று மறுபடியும் முஷ்டியை உயர்த்தி மல்லுக்கட்டுகிறார் விஷால்.
மறுபடியும் முதலில் இருந்து விஷால், கருணாஸ், ஆரி எல்லாம் அறிக்கை விடப் போறாங்களேன்னு நினைச்சா….