நடிகர் சங்க தேர்தல்: பாக்யராஜ் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

 

நடிகர் சங்க தேர்தல்: பாக்யராஜ் அணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணியின் சுவாமி சங்கரதாஸ் அணி தங்களது  தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணியின் சுவாமி சங்கரதாஸ் அணி தங்களது  தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கடந்த முறை போட்டியிட்ட நாசர் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி களம் கனவுள்ளது. இதற்காக நடிகர்கள் மற்றும் நடிகைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அறிக்கை பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி வெளியிட்டுள்ளது. அதில் ‘எந்த வித நிதி திரட்டலும் இல்லாமல் 6 மாத காலத்தில், நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். டோக்கன் முறை முழுமையாக ரத்து செய்யப்படும், மூத்த கலைஞர்கள் நலம்பெற முதியோர் இல்லம் திட்டம். நடிகர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். உறுப்பினர்களுக்கான சேமநல நிதியை, நடிகர் சங்கமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நடிகர் கமலிடம் ஆதரவு கேட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், நடிகர் சங்க கட்டிட  திறப்பு விழாவிற்குத் தன்னை அழையுங்கள் என்று கமல் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.