நடிகர் சங்க தேர்தல்: பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம்! கொந்தளிக்கும் பிரபல நாடக நடிகர்!

 

நடிகர் சங்க தேர்தல்: பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம்! கொந்தளிக்கும் பிரபல நாடக நடிகர்!

பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம் என்று பிரபல நாடக நடிகர் பேசியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம் என்று பிரபல நாடக நடிகர் பேசியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் விஷால் அணியை எதிர்த்து இந்த முறை பாக்யராஜ் அணி களம் காண உள்ளது. 
இதில் இருதரப்பினர்களும் நடிகர், நடிகைகளின் வாக்குகளைப் பெறத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாகச் சங்கத்தில் நாடக நடிகர், நடிகைகளின் வாக்குகள் அதிகம் இருப்பதால் அவர்களின் வாக்குகளைப் பெற இரு அணியினர்களும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். 

nadaga

இந்த நிலையில் நாடக நடிகர் ஒருவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது ‘பாக்யராஜ் ஓட்டு கேட்க வரும் போது ஏழ்மையில் இருக்கும் நாடக நடிகர்களுக்கு ஓரளவு பண உதவி செய்வோம் என்றும் அதன் பின்னர் வெற்றி பெற்றுப் பதவியேற்றவுடன் நாடக நடிகர்களுக்குப் பல உதவிகள் செய்வோம் என்று பேசியிருந்தார். 

அதுமட்டுமின்றி நாடக நடிகர்கள் ஓட்டுக்கு காசு வாங்கும் பிச்சைக்காரர் என்று அவர் எங்களைக் கருதி இவ்வாறு பேசியுள்ளார். அவர் தான் எங்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்டு வருகிறார். நாடக நடிகர்களை இழிவாக பேசிய பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டி அடிப்போம். அவருக்கு நாடக நடிகர்கள் யாரும் ஓட்டு போடக்கூடாது. அவ்வாறு ஓட்டு போட்டால் அது நாடகத்துறைக்கே செய்யும் துரோகம்’ என்று அவர் கூறியுள்ளார்.