நடிகர் சங்க தேர்தல்… பதவியை தக்க வைப்பாரா விஷால்?

 

நடிகர் சங்க தேர்தல்… பதவியை தக்க வைப்பாரா விஷால்?

நடிகர் சங்க கட்டடத்தை நடிகர் விஷால் கட்டிக் கொடுத்தாலும் வரும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

சென்னை: நடிகர் சங்க கட்டடத்தை நடிகர் விஷால் கட்டிக் கொடுத்தாலும் வரும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

நடிகர் சங்கத்தேர்தல் ஆறுமாதங்கள் தள்ளி வைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் முணுமுணுப்புகள் எழுந்து வருகின்றன. ஆனால் விஷால் தரப்பில் நாம் அறுவடை பெற்ற  வெற்றியை நிஜமாக்க, கட்டிடத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டுதான் போகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்

ஆனால் அவர் கட்டிடத்தை முழுமையாக முடித்துக் கொடுத்தாலும் வரும் தேர்தலில் விஷால் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமல்ல என்கிறார்கள். காரணம் இந்த முறை தேர்தலில் தலைவருக்காக ஐந்து போர் போட்டியிட இருக்கிறார்கள் என்பதுதான்

jk ritheesh

கடந்த தேர்தலில் விஷாலுக்கு பக்கபலமாக இருந்து கரன்ஸிகளை கரைபுரண்டு ஓட வைத்தவர் ஜே.கே.ரித்தீஷ்அவர் இப்போது விஷாலுக்கு எதிராக இருக்கிறார். இதே போல அன்று களப்பணியாற்றிய நடிகர் உதயா, ஸ்டுடியோ நைன் சுரேஷ் ஆகியோரும் விஷாலுக்கு எதிரணியில் இருக்கிறார்கள்.

இதனால் அன்று இருந்த சூழல் போல விஷாலுக்கு சாதகமாக இன்று இல்லை. இதில் தலைவருக்கு ரித்தீஷ், எஸ்.வி.சேகர், ராதாரவி, ரித்தீஷ் சார்பில் இன்னொரு நபர் என்று கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் செயலாளர் பொறுப்புக்கு இல்லாமல் தலைவர் பொறுப்பிற்கு விஷால் போட்டியிட இருக்கிறார் என்கிறார்கள்.

radha ravi

இதனால் இந்த முறை ஐந்து நபர்கள் ஒரே பதவிக்கு போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் மீண்டும் நடிகர் சங்கத்தேர்தல் பரபரப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.