நடிகர் சங்க தேர்தல் தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு மேல் முறையீடு செய்ய திட்டம்!

 

நடிகர் சங்க தேர்தல் தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு மேல் முறையீடு செய்ய திட்டம்!

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணியும்’ களமிறங்கியது.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ் அணியும்’ களமிறங்கியது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தபால் வாக்குகள் முறையாக நடிகர்களை சென்று சேரவிலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தேர்தலை  ரத்து செய்ய கோரி ஏழுமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் புதிய தேர்தலை ஓய்பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் என்பவர் தலைமையில் நடத்த உத்தரவிட்டார். 

உயர்நீதிமன்றம்

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு  செய்துள்ளனர்.