‘நடிகர் சங்க தேர்தல் செல்லாது’ : விஷால் அணியை ஆட்டம் காண வைக்கும் தமிழக அரசு!

 

‘நடிகர் சங்க தேர்தல் செல்லாது’ : விஷால் அணியை ஆட்டம் காண வைக்கும்  தமிழக அரசு!

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் நடிகர் சங்க பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னை: சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தலை  ரத்து செய்ய கோரி  குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

hc

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நேற்று சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் நடிகர் சங்க பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அரசு தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பாகப் பழைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால் நிர்வாகிகள் பதிவேற்று பணிகளைத் தொடர்ந்திருப்பார்கள்’ என்று கூறப்பட்டது. 

இதுகுறித்து தமிழக அரசு சார்பில்  கூறிய போது,  உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால்  இந்த தேர்தலே செல்லாது. அதுமட்டுமின்றி அரசு நடிகர் சங்க விஷயத்தில் தலையிடவில்லை’ என்று வாதம் செய்யப்பட்டது.இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி, வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.