நடிகர் சங்க தேர்தலுக்கு ஓகே, ஆனா ரிசல்ட்டுக்கு நோ – உயர்நீதிமன்றம்!

 

நடிகர் சங்க தேர்தலுக்கு ஓகே, ஆனா ரிசல்ட்டுக்கு நோ – உயர்நீதிமன்றம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எல்லாமே ஷரி படத்தில் வருகிற ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் எடிட்டிங் போல விறுவிறுவென காரியங்கள் நடந்தேறின.

ஜூன் மாதம் 23ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது. அடையாறில் இருக்கும் கல்லூரியில் தேர்தலை நடத்தக்கூடாது, நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நியாயம் கிடைக்காமல் தேர்தல் நடக்ககூடாது, தேர்தல் முடிந்தவுடன் விரலில் வைக்கும் மை காயக்கூடாது என நியாயமான மற்றும் அநியாயமான காரணங்களை முன்வைத்து சங்கங்களின் பதிவாளர் தேர்தலை ரத்து செய்தார். வெகுண்டெழுந்த விஷால் முதலில் ஆளுநரை சந்தித்தார். ஆண்களை எல்லாம் அவர் சந்திக்க மாட்டாரே என முதலில் தயங்கிய பாக்யராஜ் அணியினர், பின்னர் சுதாரித்துக்கொண்டு அவர்களும் ஆளுநரை சந்தித்து தேர்தலை நடத்தக்கோரி மனு அளித்தனர்.

Vishal

அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக ஆகிவிடக்கூடாது என்ற பயத்தில் தேர்தலை அதே தேதியில் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு ஒன்றையும் போட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எல்லாமே ஷரி படத்தில் வருகிற ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் எடிட்டிங் போல விறுவிறுவென காரியங்கள் நடந்தேறின. தீர்ப்பில், சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்த நீதிபதி, தேர்தலை நடத்த அனுமதி வழங்கியும் ஆனால் அதேநேரம் வாக்கு எண்ணிக்கையை நடத்த தடைவிதித்தும் தீர்ப்பு வழங்கினார். ஆக, திட்டமிட்டபடி 3100 சொச்சம் வாக்காளர்கள் பங்கேற்கும் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. வழக்கைத் தொடுத்த விஷால் இதனையே முக்கிய சாதனையாக சொல்லி வாக்கு சேகரிக்கவும் கூடும். நடக்கட்டும்.