நடிகர் சங்க தேர்தலால் நாட்டுக்கு என்ன பயன்? லிஸ்ட் போடுகிறார் ஆர்.ஜே. பாலாஜி!

 

நடிகர் சங்க தேர்தலால் நாட்டுக்கு என்ன பயன்? லிஸ்ட் போடுகிறார் ஆர்.ஜே. பாலாஜி!

நடிகர் சங்கம்மூலம் நாங்க நதிகளை இணைக்கப் போறோம், விவசாயிகளுக்கு உதவப் போறோம், ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்தப்போறோம், 2021 கடைசிக்குள்ள இந்தியாவை வல்லரசாக்கப் போறோம்.

என்ன அப்புடி கேட்டுட்டீங்க? நடிகர் சங்க தேர்தல்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா உங்களுக்கு? நடிகர் சங்கம்மூலம் நாங்க நதிகளை இணைக்கப் போறோம், விவசாயிகளுக்கு உதவப் போறோம், ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்தப்போறோம், 2021 கடைசிக்குள்ள இந்தியாவை வல்லரசாக்கப் போறோம்னு போகிற போக்கில் ஆர்.ஜே.பாலாஜி நக்கல் அடித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவின்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இப்படிப் பேசி, தேர்தல் இறுக்கத்தை குறைத்துள்ளார்.

RJ Balaji

சீனியர் நடிகர், மக்கள் நீதி மய்ய தலைவர் என பல போஸ்டிங்குகளோடு வந்த கமலிடம், ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், “இதனை போஸ்டல் டிப்பார்ட்மென்ட்டின் பிழை என்றும் சொல்லலாம், தாமதம் என்றும் சொல்லலாம், அடுத்த முறை இது நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என மய்யமாக அறிவுரை வழங்கிவிட்டு சென்றார்.