நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  திரைத்துறையினர் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன் காரணமாக திரைக்கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  திரைத்துறையினர் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன் காரணமாக திரைக்கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டுமென்று பெப்ஸி மற்றும் நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் எதிரொலியாக பல நடிகர், நடிகைகள் பணமாகவும் பொருட்களாகவும் நலிவடைந்த கலைஞர்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்கள். 

tt

இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் நிவாரண உதவி செய்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்பாக அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை சாலிகிராமத்திலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி கீதா, பொது மேலாளர் பால முருகன் ஆகியோர் முன்னிலையில் 600- க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இன்று பொருட்கள் வழங்கப்பட்டது. அதில் பொருட்கள் 10 கிலோ அரிசி,உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு , மிளகாய், சர்க்கரை, புளி போன்ற பொருட்கள் அடங்கும். 

tt

முன்னதாக நடிகர் ரஜினி பெப்சி அமைப்பிற்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.