நடிகர் சங்கத் தேர்தல்…ராதிகா சரத்குமாரை எதிர்த்து விஷால் போட்டியில்லை…

 

நடிகர் சங்கத் தேர்தல்…ராதிகா சரத்குமாரை எதிர்த்து விஷால் போட்டியில்லை…

நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் பதவி உட்பட நடிகர் விஷால் எந்தப் பதவிக்குப் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப்போட்டியிடுவது என்பதில் ராதிகா சரத்குமார் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் பதவி உட்பட நடிகர் விஷால் எந்தப் பதவிக்குப் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப்போட்டியிடுவது என்பதில் ராதிகா சரத்குமார் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

2015ம் ஆண்டு நடைபெற்ற  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியும், சரத்குமார்-ராதாராவி அணியும் நேரடியாக மோதின. இதில் விஷால் அணி  அபார வெற்றி பெற்றது. இதில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்த அணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. ஆனால் நடிகர் சங்க வேலைகள் காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து அண்மையில் நடைபெற்ற நடிகர்  நடிகர் சங்க கூட்டத்தில் தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் இதற்கான ஆவணங்களையும் நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் ஜுன் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை 11.6.2019 காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இறுதியாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 14.06.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலைப்போலவே இந்த முறையும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு கருணாஸ் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி விஷால் போட்டியிடும் பட்சத்தில் தனது கணவர் மீது வழக்குபோட்டு அசிங்கப்படுத்திய அவரை எதிர்த்து நடிகை ராதிகா இறங்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன. அப்படி ராதிகா சரத்குமார் போட்டியிடுவது உறுதி என்று தெரிந்தால் விஷால் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறாராம். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்…விஷால் போட்டியிடுவதற்கு அவரது அணியிலேயே  பலத்த எதிர்ப்பு இருந்து வருவதுதான்.