நடிகர் கமல் ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை!

 

நடிகர் கமல் ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை!

இப்படி சினிமா, அரசியல் என பிஸியாக  இருக்கும் கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது

இந்தியன் 2 படத்தில் பிஸியாக  நடித்து வரும் நடிகர் கமல் ஹாசன்  தனது 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தை  வெற்றிகரமாக கொண்டாடினார். அத்துடன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள கமல் ஹாசன்  அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.  

kamal

மக்கள் நலனுக்காக தனது நண்பரும் சக நடிகருமான ரஜினியுடன் இணைந்து  அரசியலில் பயணிக்க தயார் என்று தெரிவித்துள்ளார். இப்படி சினிமா, அரசியல் என பிஸியாக  இருக்கும் கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நம்மவர் அவர்களின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. நம் முடிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் தலைவர் அவர்களுக்கு இருந்தால் தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை  அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நம்மவர்  கமல் ஹாசன் அவர்களுக்கு வரும் 22. 11. 2019 அன்று அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின் நம்மவர் நம்மை சந்திப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

kamal

பொதுவாக நடிகர்களோ, அரசியல்வாதிகளோ மருத்துவமனைக்குச் சாதாரண சிகிச்சைக்கு சென்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதனால் கமலின் அறுவைசிகிச்சை குறித்து முன்கூட்டியே கூறி தேவையற்ற வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்.