நடிகர் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்தவர் மகேந்திரன்; நடிகர் ரஜினி உருக்கம்!

 

நடிகர் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்தவர் மகேந்திரன்; நடிகர் ரஜினி உருக்கம்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன். விஜயின் தெறி, ரஜினியின் பேட்ட, உதயநிதியின் நிமிர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் (79). மகேந்திரனின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rajinikanth

இயக்குனர் மக்கேந்திரனின் மறைவு திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகினர் மற்றும் முன்னணி இயக்குனர்கள் உள்பட ஏராளமானோர் அவருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை தந்து ரஜினியின் திரைப்பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் என்ற அடையாளத்தை எனக்கு கொடுத்தவர் மகேந்திரன். எனக்குள் இருந்த நடிகனை அடையாளம் கண்டுப்பிடித்து, அதை வெளிக்கொணர வைத்தவர் அவர். அவருடைய முள்ளும் மலரும் படத்தில் நடித்தது எனக்கு பெருமை என்றார்.

இதையும் வாசிங்க

சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான்: இயக்குநர் மகேந்திரன்