நடிகர் அஜய் தேவ்கன் தந்தை வீரு தேவ்கன் மறைவு!

 

நடிகர் அஜய் தேவ்கன் தந்தை வீரு தேவ்கன் மறைவு!

நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும் பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார். 

நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும் பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார். 

பாலிவுட்டில் மிக பிரபல சண்டை பயிற்சி இயக்குநரான வீரு தேவ்கன் இவர் நடிகர் அஜய் தேவகனின் தந்தையாவர். இவர் இன்று காலை மும்பையில் காலமானார். இவரது இறுதிஊர்வலம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. 1991 ஆம் ஆண்டு தனது மகன் அஜய் தேவ்கனை வைத்து ஹிந்துஸ்தான் கி கஸம் என்ற திரைப்படத்தை இயக்கினார். மேலும் ஹிம்மத்வாலா, த்ரிதேவ் உள்ளிட்ட 100 படங்களுக்கு மேல் சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் க்ரந்தி, சவுரப், சிங்காசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.