நடிகர்கள் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- பொன். ராதா அட்வைஸ்!

 

நடிகர்கள் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- பொன். ராதா அட்வைஸ்!

பிரதமர் நரேந்திரமோடியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “நமது நாட்டின் ஒரு அங்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் காஷ்மீரை சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையை மாற்றி ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக காஷ்மீரை மாற்றி சிறப்புச் சேர்த்திருக்கிறார் நரேந்திர மோடி. நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை அகற்றி இருக்கின்றோம் . 
வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவருடைய கொள்கைகளை விவரிக்கும் வகையில் பாத யாத்திரைகள் திட்டமிடப்பட்டுள்ளது. 15 நாட்கள் தினசரி 10 கிலோ மீட்டர் இந்த பாதயாத்திரை நடைபெறும்.

பொன். ராதா

ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர். இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கக் கூடாது என சிதம்பரம் கூறுவதில் ஆச்சரியமில்லை, அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது காங்கிரஸ் ஹிந்தியை கொண்டுவர முயன்று தோற்று போனது. அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைகள். நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர்களும் நாட்டின் குடிமக்களே. மக்கள் நீதி மையத்தின் சார்பில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது. திரைப்படத்துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது. இறந்தகாலத்தில் நடந்தவற்றைக் கூறி யாரும் ஒருவரை ஒருவர் மூக்கறுத்து கொள்ள வேண்டாம். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்டவுட் ஒரு பேனர் கூட வைக்க அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு கோவில், மசூதி மற்றும் சர்ச்  நிகழ்ச்சியில் பேனர் வைக்க கூடாது” எனக்கூறினார்.