நடிகர்கள் சண்டையில் லாபம் பார்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்! இத்தனை கோடி சம்பளமா?

 

நடிகர்கள் சண்டையில்  லாபம் பார்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்! இத்தனை  கோடி சம்பளமா?

 லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவின் மார்க்கெட் 20 கோடி வரை உயர்ந்துள்ளது. 

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவின் மார்க்கெட் 20 கோடி வரை உயர்ந்துள்ளது. 

nayan

நயன்தாரா படங்கள் அனைத்துமே ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டவை. வசூல், வியாபாரம் என்பதைத் தாண்டி ரசிகர்களின் பொழுதுபோக்கு நேரத்தை அவரது படங்கள் முழுவதுமாகக் கவர்ந்தன

nayan

நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் ஆண்டுக்கு சுமார் இரண்டு வெளிவந்தாலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.   நயன்தாரா பொறுத்தவரையில் நடிகர்கள் போலவே அவரது நடிப்பை காணவும் திரையரங்குகளில் பெரும் கூட்டம் கூடுகிறது. அதனால் இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க நடிகர்களில்  கடும் போட்டி நிலவுகிறது. இவர்களின் சண்டையால்  நயன்தாராவின் மார்க்கெட் 15லிருந்து 20 கோடி வரைக்கும் சென்றதுதான் மிச்சம். இது அவரது படம் ஓடினாலும் சரி இல்லையென்றாலும் சரி அவரது மார்க்கெட் மட்டும் குறையவில்லை. 

nayan

அதனால் தான் தற்போது ஒரே நேரத்தில் மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் படங்களில் நடித்துவருகிறார். அதாவது ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார், விஜய் நடிக்கும் புதிய படம், சிவகார்த்திகேயனுடன்  மிஸ்டர்.லோக்கல் படம் என படு பிஸியாக உள்ளார். பெரிய நடிகர்களோ  நயன்தாராவின் ரசிகர்கள்  செல்வாக்கை தங்கள் படத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  அதனால் தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சாணி கொம்பில் உள்ளார்.  

இதையும் வாசிக்க: புதுத்துணி எடுத்துத் தராத கணவர்: குழந்தையின் கழுத்தை அறுத்து, தாய் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி தரும் சம்பவம்!