நடந்து முடிந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா… கொலை வெறியில் அமைச்சர் 

நடந்து முடிந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா… கொலை வெறியில் அமைச்சர் 

கடந்த இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வீரமணியின்  பர்ஃபாமென்ஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் அவரை அசைக்க முடியவில்லை.அவர் வீட்டில் வருமான வரிச் சோதனைவரை நடத்திப் பார்த்தும் அவர் அசரவில்லை.இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாள் விழா விவகாரத்தில் ‘ சாமி ‘ என்கிற ஒரு நகரப் பகுதிச் செயலாளரும் ஒரு அமைச்சரும் வீரமணியை ஒரு புது ரூட்டில் போய் டென்ஷனாக்க்க் இருக்கிறார்கள். 

கே.சி வீரமணிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தின் செயலாளரும் அவரே.இப்போது வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு விட்டதால் அமைச்சர் நிலோஃபர் கபில் உட்பட பலருக்கும் மாவட்டச் செயலாளர் ஆசை வந்துவிட்டது.

கடந்த இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வீரமணியின்  பர்ஃபாமென்ஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் அவரை அசைக்க முடியவில்லை.அவர் வீட்டில் வருமான வரிச் சோதனைவரை நடத்திப் பார்த்தும் அவர் அசரவில்லை.இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாள் விழா விவகாரத்தில் ‘ சாமி ‘ என்கிற ஒரு நகரப் பகுதிச் செயலாளரும் ஒரு அமைச்சரும் வீரமணியை ஒரு புது ரூட்டில் போய் டென்ஷனாக்க்க் இருக்கிறார்கள். 

kc-veeramani-89

நடந்து முடிந்த ஜெயலலிதா பிறந்த நாளுக்கு சிறப்பாக விழா நடத்தி தனது செல்வாக்கை மீட்க வேண்டும் என்று நினைத்த அமைச்சர் தன் கைகாசைப் போட்டு விழா ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். சுமார் ஆயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆட்களுக்கு காசை அள்ளி வீசி கூட்டமும் சேர்த்துக் காட்டி இருக்கிறார். விழா நல்லபடியாக முடிந்த பிற்குதான் அந்த அதிர்ச்சி செய்தி அவர் காதுக்கு வந்திருக்கிறது.

அந்த ‘ சாமி’ என்கிற பகுதிச் செயலாளர் தன்னை மாநகரச் செயலாளர் ஆக்குவதாக அமைச்சர் வீரமணி ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், அதனால் இந்த ஆண்டு அம்மா பிறந்த நாள் செலவுகளை எல்லாம் நான்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.என்று செய்தியை பரப்பி விட்டு வருகிறாராம். வீரமணி அப்படியெல்லாம் கைகாசை செலவு செய்யக் கூடியவர் இல்லை என்பதால் இந்த வதந்தியை கட்சிக்காரர்கள் பலரும் நம்புகிறார்கள் என்பதுதான் சோகம். இந்த சதியின் பின்னணியில் ஒரு அமைச்சரும் இருப்பதாக கிடைத்த செய்தி அவரை கொலை வெறிக்கு ஆளாக்கி விட்டதாம். விரைவில் இந்தப் பிரச்சினை வெடிக்கும் என்று வேலூர் ரத்தத்தின் ரத்தங்கள் எதிர் பார்க்கிறார்கள்.