நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்… 1 லட்சம் பேர் மனுத்தாக்கல் !

 

நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்… 1 லட்சம் பேர் மனுத்தாக்கல் !

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல், அந்தந்த கட்சிகளும் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். 

ttn

அதிமுக, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிடப்போகும் அரியலூர், திருவாரூர், தேனி, சேலம், கிருஷ்ணகிரி,  மதுரை, தூத்துக்குடி வடக்கு உறுப்பினர்களின் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது. தேமுதிகவில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை அடுத்த வாரம் வெளியிடும் என்று அக்கட்சியின் துணை செயலாளர் தெரிவித்துள்ளார். 

ttn

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுத்தாக்கலின் எண்ணிக்கையைக் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 நாட்களில் மட்டும் 9,778 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் மட்டும் 71,763 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்றும் வேட்பு மனுத்தாக்கலுக்கான கால அவகாசம் இருப்பதால், வேட்புமனுத் தாக்கலின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.