நக்கீரன் கோபால் வழக்கில் மேல்முறையீடு.. ஆளுநர் மாளிகை பலே திட்டம்

 

நக்கீரன் கோபால் வழக்கில் மேல்முறையீடு.. ஆளுநர் மாளிகை பலே திட்டம்

நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் ஆளுநர் மாளிகை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் ஆளுநர் மாளிகை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்தப் புகாரின் அடிப்படையில் நேற்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

அந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், “சட்டப்பிரிவு 124-ன் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்தது தவறு, அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது” என தீர்ப்பு வழங்கியிருந்தார்.

அந்த தீர்ப்பை சற்றும் எதிர்பாராத ஆளுநர் மாளிகை, ஒரு பிரிவின் கீழ் மட்டும் வழக்கு போட்டதுதான் கோபால் விடுதலையானதற்குக் காரணம் என கருதியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை அதிகாரிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்ட அதே வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து கேள்விப்பட்ட நக்கீரன் கோபால், “அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல்.. அவர்கள் மேல்முறையீடு செய்யட்டும். அப்போதும் நாம் வெளியே வந்துவிடுவோம்” என கூறியுள்ளார்.