நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

 

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் கட்டுரை வெளியானதால் அந்த இதழின் ஆசிரியர் கோபாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து 4 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஆளுநரின் தனிசெயலாளர் அளித்த புகாரின் பேரில் பிரிவு 124-A-ன் கீழ் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நக்கீரன் இதழின் இணையதள ஆசிரியர் வசந்த்தும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி அந்த இதழின் முதன்மை ஆசிரியர் தாமோதரன், பொறுப்பு ஆசிரியர் லெனின் மற்றும் தலைமை நிருபர் இளைய செல்வம் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.