நக்கீரன் கோபால் கைதுக்கு வரவேற்பு; பாஜக வரிசையில் டிடிவி!

 

நக்கீரன் கோபால் கைதுக்கு வரவேற்பு; பாஜக வரிசையில் டிடிவி!

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை வரவேற்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை வரவேற்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு இருக்கும் தொடர்பு குறித்து நக்கீரன் இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது.

இதுகுறித்து தம் மீது அவதூறு பரப்புவதாக ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.

தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், “எந்தவித ஆதாரமில்லாமல் தனி நபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு. அந்த வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதை நான் வரவேற்கிறேன். பத்திரிக்கையாளர்கள் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். கடந்த, 1996ம் ஆண்டு என் மீது அவதூறு செய்தி வெளியிட்ட  நக்கீரன் கோபாலுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்று கொடுத்தேன்” என திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நக்கீரன் கோபால் கைதுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்து வரும் நிலையில், டிடிவி தினகரனும் தற்போது ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.