நக்கீரன் கோபாலை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்

 

நக்கீரன் கோபாலை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் நக்கீரன் கோபாலை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை: கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் நக்கீரன் கோபாலை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருக்கும் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தை கட்டுரையாக வெளியிட்டிருந்த நக்கீரன் இதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் தனி செயலாளர் ராஜகோபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், பத்திரிகைச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் விதமாக கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், காவலில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், நக்கீரன் கோபாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, நக்கீரன் கோபால் கைதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.