நகையை பறிக்கொடுத்த நேரத்திலும் தொழிலாளிக்காக உருகிய லலிதா ஜூவல்லரி முதலாளி!

 

நகையை பறிக்கொடுத்த நேரத்திலும் தொழிலாளிக்காக உருகிய லலிதா ஜூவல்லரி முதலாளி!

வாங்க வந்து பாருங்க… பிடிச்சிருந்தா வாங்குங்க என விளம்பரம் செய்த லலிதா ஜூவல்லரி ஓனரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் அனைவரும் கலாய்த்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவரோ தொழிலாளிக்காக கவலைப்பட்டு கொண்டிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாங்க வந்து பாருங்க… பிடிச்சிருந்தா வாங்குங்க என விளம்பரம் செய்த லலிதா ஜூவல்லரி ஓனரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் அனைவரும் கலாய்த்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவரோ தொழிலாளிக்காக கவலைப்பட்டு கொண்டிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

லலிதா ஜுவல்லரி முதலாளி கிரண் ரெட்டி இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று கிரண் ரெட்டி குற்றவாளியிடம் பேசினார். இருப்பினும் அவர் குற்றவாளியிடம் பேசியவை பதிவு செய்யப்பட்டன. 

lalitha jewellery

அவர் குற்றவாளியிடம், “பல இடங்களில் எனது கிளைகள் நிறைய இருக்கிறது. குறிப்பாக திருச்சியில் மட்டும் வந்து திருட என்ன காரணம், அதே நேரத்தில் எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் நகை உள்ள இடத்திற்கு வர முடியும் என்பது எப்படி தெரியும், என்று கேட்டார். அதற்கு அந்த குற்றவாளி, நான் எனது மனைவியிடம் 10 முறைக்கு மேல் இந்த கடையில் நகை வாங்க வந்துள்ளோம். மனைவி நகை வாங்கிக்கொண்டிருக்கும்போது நான் கடையை கவனித்தேன்.. பிளான் போட்டுதான் கடையில் ஓட்டைப் போட்டு உள்ளே வந்தோம். உடனே நன்றி என கூறிவிட்டு நகர்ந்த அவரை மறித்த குற்றவாளி, எனக்கு ஏன் நன்றி சொல்றீங்க என கேட்டார். உடனே கிரண், திருட்டுபோன நகையைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இன்சூரன்ஸ் செய்துள்ளேன். அதைவிட, திருட்டுபோன நகைக்கு மேல் சம்பாதிக்க என்னிடம் தைரியமும் திறமையும் உள்ளது. 

இவ்வளவு பெரிய கடையில் அவ்வளவு காவலாளிகள் இருந்தும் ஓட்டை போட்டு ஒருவர் உள்ளே வந்திருக்கிறார் என்றால் குற்றவாளிக்கு என் கடையை சேர்ந்த தொழிலாளிதான் உதவியிருக்க முடியும் என்ற சந்தேகத்தில் இருந்தேன். ஆனால் தற்போது அது இல்லை என தெளிவாகிவிட்டது. நான் எனது தொழிலாளியை சந்தேகித்தது அவரை தண்டிப்பதற்காக அல்ல…. எனது கடையில் வேலை பார்ப்பவன் திருடும் அளவிற்கு செல்கிறான் என்றால் என் மீது என்ன குறை இருக்கிறது அதை நான் உடனே சரி செய்ய வேண்டும். அந்த ஊழியனின் பணத் தேவை எனக்கு ஏன் தெரியவில்லை ,அவர்களை நான் சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். அதை உடனே சரி செய்ய வேண்டும் என நினைத்தேன் என கூறினார். இதைக்கேட்ட காவல்துறை அதிகாரிகளும், குற்றவாளியும் அதிர்ச்சியுடன் கிரணை பார்த்தனர்.