நகர்ப்புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை !

 

நகர்ப்புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை !

முதன் முதலாகக் குஜராத் மாநிலம் தான் அபராத தொகையைக் குறைத்து புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. 

புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தியதிலிருந்து, போக்குவரத்துக்கு விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.

ttn

அதன் படி, எல்லா மாநிலங்களிலும் போக்குவரத்து விதி மீறல்களுக்குப் பல மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர், அந்தந்த மாநிலங்களே அபராத கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. முதன் முதலாகக் குஜராத் மாநிலம் தான் அபராத தொகையைக் குறைத்து புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. 

ttn

இந்நிலையில், குஜராத் அரசு மாநிலத்தின் நகர்ப்புறங்களில் ஹெல்மெட் அணிவதை விருப்பமாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.

gujarat

இது குறித்துப் பேசிய குஜராத் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர், “நகர பகுதிகளுக்குள் கட்டாய ஹெல்மெட் தொடர்பாக எங்களுக்குப் பல புகார்கள் வந்தன. எனவே நகர பகுதிகளுக்குள் மட்டுமே இதை விருப்பமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் அல்லது கிராம சாலைகளில் வாகனம் ஓட்டும்போதும் நகர்ப்புறங்களின் எல்லையை விட்டு வெளியே செல்லும் போதும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.