நகராட்சி ஆணையரை மன்னித்த சிறு வியாபாரி… மீண்டும் பணியில் நியமிக்கக் கோரி மனு

 

நகராட்சி ஆணையரை மன்னித்த சிறு வியாபாரி… மீண்டும் பணியில் நியமிக்கக் கோரி மனு

கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள ஆணையரை மீண்டும் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக நிமிக்க வேண்டும் என்று அவரால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள ஆணையரை மீண்டும் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக நிமிக்க வேண்டும் என்று அவரால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நகராட்சி ஆணையராக இருந்தவர் சிசில் தாமஸ். சமூக இடைவெளி பின்பற்றாமல் கடைகள் செயல்பட்டதால், பழங்களை சாலையில் வீசியும், தள்ளுவண்டிகளைக் கீழே தள்ளியும் அடவாடி நடவடிக்கை எடுத்தார்.

sisil-thomas-67

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அவர் மீது மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. தமிழக அரசு அவரை கட்டாயக் காத்திருப்பில் வைத்தது. இந்த நிலையில் சிசில் தாமஸை மீண்டும் வாணியம்பாடி நகராட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வியாபாரிகள் உள்ளிட்ட 18 தொழில் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பத்தூர் கலெக்டர் சிவனருளிடம் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “வாணியம்பாடி நகர் பகுதியில் தற்போது வரை 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் தீவிர, விடா முயற்சி காரணமாக வாணியம்பாடியில் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரது விடாமுயற்சியும் கடின உழைப்புமே காரணம். எனவே, நகராட்சி ஆணையர் தாமஸ் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து அவரை மீண்டும் வாணியம்பாடியில் பணியமர்த்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “சிசில் தாமஸ் செயல்பாடுகளில் எங்களுக்கு சிறிதளவும் வருத்தம் இல்லை. அவர் செய்தது பொது மக்களின் நலனுக்காகவே. தமிழக அரசு சிசில் தாமசை மீண்டும் பணியமர்த்த வேண்டும்” என்றார். தள்ளுவண்டியை தள்ளிவிட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணே, நகராட்சிக்கு ஆணையருக்கு ஆதரவாக மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.