நகரங்களில் முழு அடைப்பு… இ.பி.எஸ், உத்தவ் தாக்கரேக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

 

நகரங்களில் முழு அடைப்பு… இ.பி.எஸ், உத்தவ் தாக்கரேக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடக்கப்பட்டால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய நிலையில், 14 மணி நேர மக்கள் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க மாநில எல்லைகள் மூடப்பட்டது போதாது, நகரங்களில் கட்டாய அடைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடக்கப்பட்டால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய நிலையில், 14 மணி நேர மக்கள் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். அது நீட்டிக்கப்படுமா என்று தெரியவில்லை. அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு இன்னும் அதிகம் வேகம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. 

corona

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நகரங்களை மூடி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக, மகாராஷ்டிர முதல்வர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

tamilnadu

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
“வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் முதல்வர்களுடன் பேசிய பிரதமர் மோடி எந்த ஒரு எல்லோரும் ஏற்றக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்ததாக தெரியவில்லை. உலகத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணம் மூடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பவேரியா மாநிலம் மூடப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசு தன்னுடைய மாநில எல்லைகளை மூடியதற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் முழு அடைப்பு என்ற உறுதியான நடவடிக்கையை எடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

 

அதேபோல் நகரங்கள் மூடலை அறிவித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை பாராட்டுகிறேன். படப்படியாக செய்ய வேண்டிய காரியம் இல்லை இது. மொத்த நகரங்கள், சிறுநகரங்களிலும் முழு அடைப்பை அமல்படுத்தும் துணிவான முடிவை எடுங்கள்.
தமிழகமும் மகாராஷ்டிராவும் முழு அடைப்பை அறிவித்தால், மத்திய அரசும் தைரியமாக தீர்க்கமான முடிவை எடுக்கும் வழியைத் தேடும்” என்று கூறியுள்ளார்.