த.மா.கா-வின் சைக்கிளை பஞ்சராக்கினார் எடப்பாடி! என்ன செய்யப்போகிறார் வாசன்?

 

த.மா.கா-வின் சைக்கிளை பஞ்சராக்கினார் எடப்பாடி! என்ன செய்யப்போகிறார் வாசன்?

த.மா.கா தலைவர் வாசன் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால், அவரும் இரட்டை இலையில்தான் நிற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: த.மா.கா தலைவர் வாசன் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால், அவரும் இரட்டை இலையில்தான் நிற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய காங்கிரஸ் குடும்ப வாரிசு வாசன். அவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோதும்கூட எந்தப் பதவியிலும் அமராத எம்.பியாகவே வாழ்ந்தவர். 1996 தேர்தலில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது அதை எதிர்த்து காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து வென்று காட்டியவர் மூப்பனார்.

அவரது வாரிசாக களமிறங்கிய வாசன் மத்திய அமைச்சராக பதவிவகித்தவர்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல்களால் வெறுத்து  காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா என்று தனிக்கட்சி துவங்கினார்.அவ்வப்போது அறிக்கைகள் விடுவாரே தவிர,மக்கள் போராட்டங்களில் களம் இறங்கி போராடுவதில் கொஞ்சம் பின் தங்கிதான் இருக்கிறார்.கூட்டணி பேச்சு வார்த்தைகளிலும் அப்படியே. 

அ.தி.மு.க கூட்டணியில் ஒரு சீட் மட்டுமே தருவதாக சொல்லியிருக்கிறார்கள். தவிர,இன்னொரு கண்டிஷனையும் வாசனுக்கு வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.என்ன தெரியுமா!? உங்கள் சைக்கிளை அப்படி ஓரமாக ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு,இரட்டை இலைச் சின்னத்தில் நில்லுங்கள் என்பதுதான் அந்த கண்டிஷன்.

அப்படி நின்று ஜெயித்தால்,அவர்அ.தி.மு.க எம்.பியாகத்தான் கருதப்படுவார். பாராளுமன்றத்தில் பி.ஜே.பி-யை ஆதரித்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.ஆகவே வாசன் என்ன முடிவு எடுப்பது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்.நேற்று விஜயகாந்தை சந்தித்து பரபரப்பு ஏற்படுத்திய திருநாவுக்கரசர் விரைவில் வாசனையும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் ,திமுக கூட்டணியில் இருப்பதால்,வாசன் அந்தக் கூட்டணிக்கு போக முடியாது என்பதால் இப்படியொரு செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!  !என்ன முடிவெடுக்க போகிறார் வாசன்!?