தோழி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

தோழி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

மத்திய பிரதேசத்தில் உள்ள பெத்துல் மாவட்டத்தில் வசித்து வரும் தீபக் 2008 ஆம் ஆண்டில், பிஎஸ்சி ஜெனெடிக்ஸ் படிக்க பெங்களூருக்கு வந்துள்ளார். அங்கு திஷா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணைச் சந்தித்துள்ளார். இருவரும் கல்லூரியில் நண்பர்களாக பழகி வந்தனர்.படிப்பு முடித்ததும் தீபக் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று  ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒரு பெண் குளித்ததை ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் எடுத்த வீடியோக்கள் 2019 அக்டோபரில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள பெத்துல் மாவட்டத்தில் வசித்து வரும் தீபக் 2008 ஆம் ஆண்டில், பிஎஸ்சி ஜெனெடிக்ஸ் படிக்க பெங்களூருக்கு வந்துள்ளார். அங்கு திஷா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணைச் சந்தித்துள்ளார். இருவரும் கல்லூரியில் நண்பர்களாக பழகி வந்தனர்.படிப்பு முடித்ததும் தீபக் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று  ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.

மறுபடியும் தீபக் பெங்களூருக்கு வேலைக்கு வந்துள்ளார். 2019-ம் ஆண்டு அக்டோபரில் தீபாக்கின் குடியிருப்பில் நடந்த  ஒரு நிகழ்ச்சிக்கு திஷா வந்துள்ளார். தீபக்கின் வீட்டிற்குச் சென்ற திஷா அங்கு குளித்துவிட்டு உடைமாற்றியுள்ளார். தனது குளியலறையில் ரகசிய கேமரா வைத்திருந்த தீபக், திஷா குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். பின் மறுபடியும் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளார். 

woman-bathing

நவம்பர் 2019 இல், தீபக் ஒரு போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி திஷாவை தொடர்பு கொண்டுள்ளார். தனது போலி இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்கிலிருந்து திஷாவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். திஷா திருப்பி பதிலளிக்காததால், தீபக் திஷாவின் வீடியோவை அவருக்கு மின்னஞ்சலுக்கு அனுப்பி ரூ .3 லட்சம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதே வீடியோவை திஷாவுக்கு வாட்ஸ்அப்பிலும் அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்தபோது, அது தீபக்கின் குளியலறையில் படமாக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த திஷா தீபக்கை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தீபக் திஷாவின்  நம்பரை பிளாக் செய்துவிட்டு தனது போலி கணக்குகளை செயலிழக்கச் செய்துள்ளார்அதனால்  கே.ஆர்.புரம் போலீஸைத் தொடர்புகொண்டு திஷா புகார் அளித்துள்ளார். விசாரணையில் தீபக் தான் செய்திகளை அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் பெத்துலிலிருந்து தீபக்கை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தனர். தற்போது தீபக் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.