தோழிகளுடன் லூட்டி அடித்த ‘பிக் பாஸ்’ சுஜா வருணி: வைரல் புகைப்படங்கள்!?

 

தோழிகளுடன் லூட்டி அடித்த ‘பிக் பாஸ்’ சுஜா வருணி: வைரல் புகைப்படங்கள்!?

நடிகை சுஜா வருணி கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னுடைய லேட்டஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

சென்னை:  நடிகை சுஜா வருணி கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னுடைய லேட்டஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

suja

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்தவர் சுஜா வருணி,  பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்த இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

suja

இதனிடையே  சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வை  11 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அவரை கரம் பிடித்தார். தற்போது சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார். 

suja

இந்நிலையில் சுஜா வருணி, தனது தோழிகளுடன் எடுத்துள்ள புகைப்படத்தைத் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இயக்குநர்  அட்லீயின் மனைவி பிரியா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் மனைவியும்  பாடகியுமான  சைந்தவி, விஜே அஞ்சனா ஆகியோர் உள்ளனர்.  இந்த புகைப்படங்களைக் கண்ட வலைதளவாசிகள் ‘அழகான ஹோம்மேக்கர்ஸ்’ என்று பதிவிட்டு வருகின்றனர்.