தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு பூண்டு எந்த வகையில் உதவும்?

 

தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு பூண்டு எந்த வகையில் உதவும்?

சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாகவும், அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க இயற்கையான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களா? அப்படியென்றால் அதற்கு பூண்டு பயன்படும்.

சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாகவும், அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க இயற்கையான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களா? அப்படியென்றால் அதற்கு பூண்டு பயன்படும்.

பூண்டு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படுகிறது. பூண்டை உணவில் சேர்க்கும்போது ​அதன் சுவையும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பூண்டு சிறந்த தேர்வு என்பது நிறைய பேருக்குத் தெரியாது. சளி, லேசான இருமல் மற்றும் நுரையீரல் தொற்று ஆகியவற்றை பூண்டு தீர்க்கும். அத்துடன் தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பூண்டு பயன்படுகிறது.

ttn

முகப்பரு:

பூண்டு ஆன்டி-பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால் இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும். உங்கள் முகத்தில் முகப்பரு இருந்தால் இரண்டு பற்கள் பூண்டு எடுத்து அவற்றை நசுக்கவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது தயிர் சேர்க்கவும். இவற்றை பேஸ்ட் போல கலக்கவும். பின்னர் அந்த பேஸ்ட்டை முகப்பருவில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் முகத்தில் ஒரேயொரு பரு கூட இல்லாமல் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் வீக்கத்தால் ஏற்படும் சிவப்பையும் குணமாக்க இதே பூண்டு பேஸ்ட்டை பயன்படுத்தலாம்.

ttn

பொடுகுக்கு சிகிச்சை:

தலையில் பொடுகு இருப்பது எரிச்சலூட்டுவது மட்டுமல்ல, அது மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. உங்கள் தலைமுடியில் பொடுகை போக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஒரு பல் பூண்டை நசுக்கி, அதில் சிறிது ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். குறைவான தீயில் அவற்றை சூடாக்கி, பின்னர் அதை சிறிது ஆற விடவும். பின்னர் அந்த பூண்டு கலந்த ஆலிவ் எண்ணெயை தலை முடியில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின்னர் லேசான ஷாம்பூ கொண்டு முடியை தண்ணீரில் அலசுங்கள். இந்த வழிமுறையை தொடர்ந்து செய்து வந்தால், தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ttn

மஞ்சள் நகங்கள்:

நகங்கள் பல்வேறு காரணங்களால் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும். நெயில்பாலிஷில் இருக்கும் அசிட்டோனின் காரணமாகவும் நகங்கள் மஞ்சள் நிறத்தை அடையும். இது நகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அவற்றின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதற்கான தீர்வு, சில பற்கள் பூண்டை நசுக்கி அவற்றை நகங்களில் தடவ வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பின்னர் டிஷ்யூ பேப்பரால் அதை துடைக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நகங்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து விடும்.