தோல்வி அடைந்த பிரதமர் என பிரதமர் மோடியை வரலாறு நினைவில் கொள்ளும்…. சித்தாராமையா கடும் தாக்கு

 

தோல்வி அடைந்த பிரதமர் என பிரதமர் மோடியை வரலாறு நினைவில் கொள்ளும்…. சித்தாராமையா கடும் தாக்கு

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு விவகாரத்தில், தோல்வியுற்ற பிரதமர் என பிரதமர் மோடியை வரலாறு நினைவில் கொள்ளும் என சித்தாராமையா கடுமையாக தாக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார தொகுப்புகள்  செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதனைதொடர்ந்து கடந்த சில தினங்களாக துறை வாரியாக பொருளாதார தொகுப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது சிறப்பு பொருளாதார தொகுப்பை குறை கூறியதோடு, பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.

சித்தராமையா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான சித்தராமையாக டிவிட்டரில், தோல்வி அடைந்த பிரதமர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரலாறு நினைவில் கொள்ளும். முட்டாளின் சொர்க்கத்தை உருவாக்கி ஏழைகள் மற்றும் நடுத்தர பிரிவினருக்கு துரோகம் செய்து விட்டார். அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி என கூறப்பட்டதல் அரசாங்கத்தின் உண்மையான செலவு 25 சதவீதம் கூட இருக்காது.

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த தொடர்ச்சியான ஊக்குவிப்புகள், கொரோனா வைரசுக்கான நிவாரண தொகுப்புகளாக கருதப்படாது. மாறாக இது சுகாதார நெருக்கடியின் போது பா.ஜ.க. மற்றும் நட்பு முதலாளிகளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பயங்கரமான பாதை. பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனமயமாக்கல் நடவடிக்கைகள் பலன் தர ஆண்டுகள் ஆகும் என்றும் கோவிட்-19 சிக்கல்களுடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் பதிவு செய்து இருந்தார்.