தோல்வியால் விரக்தி… தமிழகத்தில் முதல் அடி கொடுக்கத் தயாராகும் ராகுல் காந்தி..!

 

தோல்வியால் விரக்தி… தமிழகத்தில் முதல் அடி கொடுக்கத் தயாராகும்  ராகுல் காந்தி..!

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பதவியை விட்டுத் தூக்க முடிவு செய்துள்ளது.

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பதவியை விட்டுத் தூக்க முடிவு செய்துள்ளது. 

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த எஸ்.திருநாவுக்கரசரை நீக்கி விட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளரான கே.எஸ். அழகிரியை கடந்த சில மாதங்களுக்கு முன் நியமித்தது. அதேவேளை சிவகங்கை தொகுதியில் சீட் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ராகுலிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால், ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுத்தது காங்கிரஸ் தலைமை. சிதம்பரம்

இதனால் விரக்தியடைந்த சுதரசன நாச்சியப்பன் வெளிப்படையாகவே ப.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்திக் சிதம்ப்ரத்தையும் விமர்சித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரை சமரசப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதிக்கு சுதர்சன நாச்சியப்பனை தேர்தல் பொறுப்பாளராக்கினர். அழகிரி

வயநாடு தொகுதியில் 3 லட்சத்து 86 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல். இதற்கு முக்கியக்காரணம் சுதர்சன நாச்சியப்பனின் சுறுசுறுப்பான தேர்தல் பணி.  வயநாடு சென்றது முதல் அவரது அயராத பணிகளை பார்த்து விட்டு காங்கிரஸ் முக்கியத்தலைவர்கள் ராகுலிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். ராகுல் காந்தியும், சுதர்சன நாச்சியப்பனின் பணிகளை பார்த்து மெச்சி இருக்கிறார். நாச்சியப்பன்
வயநாட்டில் இவ்வளவு பெரிய வெற்றியை தேடித்ததந்த சுதர்சன நாச்சியப்பனின் பொறுப்பால் அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை வழங்கலாம் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராகுலிடம் பரித்துரைத்து இருக்கிறார்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி இன்னும் சில தினங்களில் கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியில் இருந்து துக்கி விட்டு சுதர்சன நாச்சியப்பனை நியமிக்க உள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாட்ரத்தில் தகவல்கள் தந்தியடிக்கின்றன.