‘தோல்வியடைந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல’ : மே.வங்க முதல்வர் மம்தா ட்வீட்!

 

‘தோல்வியடைந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல’ : மே.வங்க முதல்வர் மம்தா ட்வீட்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றவர்களுக்கு தன் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.  

மேற்கு வங்கம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றவர்களுக்கு தன் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.  

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது இன்று  காலை 8 மணிக்குத் தொடங்கியது. அங்கு  மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில்  திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக முதன்முறையாக, இங்கு அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

mamata

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மம்தா பானர்ஜி, ‘வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ஆனால் தோல்வியடைந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல.நாங்கள் முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம். விவிபாட் ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்கு எண்ணிக்கையும் முடிவடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த தேர்தலில்  பாஜக 2 இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில் தற்போது  பாஜக 14 இடங்களைக்  கைப்பற்றியுள்ளது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது