தோல்விக்கு ரவி சாஸ்திரி தான் காரணம்; கங்குலி கடும் தாக்கு !!

தோல்விக்கு ரவி சாஸ்திரி தான் காரணம்; கங்குலி கடும் தாக்கு !!

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு ரவி சாஸ்திரியின் தவறான முடிவுகள் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு ரவி சாஸ்திரியின் தவறான முடிவுகள் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

ganguly

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி நூழிலையில் வெற்றியை தவறவிட்டு இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 
இந்திய அணியின் இந்த தோல்விக்கு பலரும் பல காரணங்கள் கூறினாலும், தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கியது தான் தோல்விக்கான காரணங்களில் மிகைத்து நிற்கிறது. பாண்டியாவிற்கு முன்பாக தோனி களமிறங்கி இருந்தால் இந்த தோல்வி வந்திருக்காது என்பதே பெரும்பாலோனோரின் கருத்தாக உள்ளது. 

ganguly

இந்த நிலையில், இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை கடுமையாக சாடியுள்ளார். 
இது குறித்து  கங்குலி பேசியதாவது; 
ரிஷப் பண்ட் களத்தில் நின்றிருந்த போதே தோனி களமிறங்கி இருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக தோனி களமிறங்கி இருந்திருந்தால் விக்கெட் சரியாமல் இருந்திருக்கும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களையும் தோனி தனது கட்டுப்பாட்டில் வைத்து விளையாடி இருப்பார். ஆனால் பயிற்சியாளர் எதை யோசித்து கொண்டு தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கினார் என்பது தெரியவில்லை, இது முட்டாள்தனமானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.