தோற்றுப்போன கோடீசுவர வேட்பாளர்கள்…

தோற்றுப்போன கோடீசுவர வேட்பாளர்கள்…

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கோடீசுவர வேட்பாளர்கள் சிலரும் தோற்றிருக்கிறார்கள்.பீகாரின் பாடலிபுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட ரமேஷ்குமார் சர்மா,தனக்கு1107 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் அறிவித்திருந்தார்.ஆனால் அவர் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 1556 !

ramesh sharma

அடுத்தது,அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகனான கொண்டா விஸ்வேஸ்வர ரெட்டி.இவர் தனக்கு 895/கோடி சொத்துக்கள் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.இந்தப் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களிலேயே இரண்டாவது பெரிய பணக்காரரான விஸ்வேஸ்வர ரெட்டி தெலுங்கானாவில் உள்ள செவல்ல தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு 14 ஆயிரத்து 317 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோலிவியடைந்திருக்கிறார்.

visveswara reddy

இப்போது ஆந்திராவை கைப்பற்றி இருக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பிரசாத் வீர பொட்லூரியும் 350 கோடி சொத்துள்ளவர்.இவர் விஜயவாடா தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேச வேட்பாளர் கேசினேனி சீனிவாசிடம்12 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.

prasad veera

இது தவிர,ஜோதிர்ரயி சிந்தியா போன்ற இளவரசர்கள் எல்லாம் தோற்றிருக்கிறார்கள்.இவரகளை எல்லாம் பார்க்கையில்,வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தி வைத்ததால்,தப்பித்துக்கொண்ட நம்ம ஊர் கோடீசுவர வேட்பாளர் ஏ.சி.சன்முகம் அதிர்ஷ்டக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும்!