தோற்றவர்களுக்கு பதவி பிரமாணம்… எடப்பாடி பகுதிகளில் ஏடாகூடம்..!

 

தோற்றவர்களுக்கு பதவி பிரமாணம்… எடப்பாடி பகுதிகளில் ஏடாகூடம்..!

உண்மையிலேயே வெற்றி பெற்றால் நாங்கள், இப்போது ஏமாந்து நிற்கிறோம் என கண்ணீர் வடிக்கிறார்கள்.

தொடர் குற்றச்சாட்டுகளால் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள். உள்ளாட்சி தேர்தல் முடிவு வந்ததில் இருந்து, வெற்றி அறிவிப்பில் பல கோல்மால் நடந்ததாக பல்வேறு மாவட்டங்களில் புகார் கிளம்பி இருக்கிறது. குறிப்பாக சேலம்  மாவட்டத்தில் தேர்தல் முடிவு தொடர்பாக நாளொரு பிரச்னையாக புதிது புதிதாக கிளம்பி வருகிறது.eps

அந்த வரிசையில் ஓமலூர் பக்கமுள்ள ஒரு ஊராட்சியில் 6 வது வார்டில், தோல்வியடைந்தவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த வேட்பாளர்கள், ’’முதல்நாள் நாங்கள் வெற்றிபெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், அடுத்த நாளே வேறு சிலர் வெற்றிபெற்றதாக மாற்றி பதிவு செய்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே வெற்றி பெற்றால் நாங்கள், இப்போது ஏமாந்து நிற்கிறோம் என கண்ணீர் வடிக்கிறார்கள். தினமும் இப்படி புகார் மேல் புகார் வருவதால் அடுத்து என்ன சிக்கல் வருமோ என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள்.